சிந்துபாத்தின் மனைவி

எஸ். ராமகிருஷ்ணன்
நாடகம்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 80
விலை ரூ. 65

இந்நூலில் மூன்று நாடகங்கள் உள்ளன.
விபரம் தெரிந்த நாள் முதல் ‘தினந்தந்தி’ பத்திரிகையில் வரும் சிந்துபாத்தை வாசித்து வருகிறேன். ஜோர்ஜ் லூயி போர்ஹே, அராபிய இரவுகள் குறித்த கட்டுரை ஒன்றில் இரண்டு சிந்துபாத்துகள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டபோதுதான் சிந்துபாத் என்ற கதாபாத்திரத்தின் மீள்புனைவு பற்றிய சாத்தியங்களை யோசிக்க ஆரம்பித்தேன். சிந்துபாத் கடற்பயணம் மேற்கொள்ளும்போது, அவன் மனைவி வீட்டில் என்ன செய்துகொண்டிருப்பாள் என்ற பொறிதான் இந்த நாடகம். பணம் சேர்ப்பதற்காக வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் சிந்து பாத்துகளே; உலகைப் பற்றி கற்பனை செய்துகொண்டு, தனது அறிவாற்றல் ஒடுங்க வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்கள் அனைவரும் சிந்துபாத்தின் மனைவிகளே. இந்த இரு முனைகளுக்குள் இன்றைய நவீன வாழ்க்கையை, அதன் அபத்தங்களை, சவால்களை இந்த நாடகம் முன்வைக்கிறது. மற்ற இரண்டு நாடகங்களில், ‘சவரக் குறிப்புகள்’ நாடகத்தினுள் நாடகம் என்ற லூயி பிராண்டலோவின் வகையைச் சார்ந்தது. ‘பொய்விசாரணை’ அறிவியல் அறிஞர் புரூனோவின் விசாரணையை முன்வைத்து அறிவியலின் வரலாற்றை ஆராய்கிறது. இந்த மூன்று நாடகங்களும் வெவ்வேறு தளங்களில் மானுட வாழ்வின் நெருக்கடிகளைப் பேசுகின்றன. அவற்றின் ஊடாக மதமும் அதிகாரமும் எப்படி தனது ஒடுக்குமுறையை செயல்படுத்துகின்றன என்பதை சுட்டிக் காட்டுகின்றன.

எஸ். ராமகிருஷ்ணன்


சூரியனைச் சுற்றுகிறது பூமி

கலிலியோ - பெர்டோல்ட் பிரக்ட் & கல் - எட்வர்ட் பாண்ட்
மொழிபெயர்ப்பு: எஸ். ராமகிருஷ்ணன்
நாடகம்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 136
விலை ரூ. 110


இரண்டு மொழியாக்க நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஒன்று, பெர்டோல்ட் பிரக்டின் ‘கலிலியோ’; இன்னொன்று, எட்வர்ட் பாண்டின் ‘கல்’. அறிவியலை வாசிக்கும் நாம் அதன் வரலாற்றையும், அதற்குக் காரணமான ஆளுமைகளையும் குறித்து அறிந்து கொள்வதேயில்லை. கலிலியோ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்ட மாமேதை. அரசும் அதிகாரமும் மதமும், அறிவியலை எந்த அளவு ஒடுக்கின என்பதற்கு கலிலியோவின் வாழ்வு ஒரு உதாரணம். கலிலியோவின் இடைவிடாத போராட்டத்தின் வெற்றியே இன்று நாம் அடைந்துள்ள விஞ்ஞான வளர்ச்சி. அந்த அளவில் கலிலியோ நாடகம் மிக முக்கியமான ஒன்று. எட்வர்ட் பாண்ட், புகழ்பெற்ற பிரிட்டீஷ் நாடக ஆசிரியர். ‘கல்’ நாடகம் 1976இல் வெளியானது. இது ஒரு உருவகக் கதை போல அமைந்துள்ளது. இந்த நாடகம் உலகின் பல்வேறு நாடகப்பள்ளிகளில் பாடமாக வைக்கபட்டுள்ளது.

சுவரொட்டி

கலாப்ரியா
கட்டுரை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 152
விலை ரூ. 125

தமிழ்ச் சூழலில் அனுபவங்களை எழுதுவது மிகக் குறைவு. அதிலும் லட்சியவாதத்தில் மாத்திரம் தோயாமல், கீழ்மை மேன்மைகளோடு தன்னைப் பதிவுசெய்து கொள்பவர்கள் மிக மிகக் குறைவு. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக் காடின் ‘சிதம்பர நினைவுகள்’ தமிழில் மொழி பெயர்க்கப்பட்டபோது, அதனுடைய வெளிப்படைத் தன்மைக்காகப் பெரிதும் பேசப்பட்டது; வரவேற்கப்பட்டது. கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ அதைவிடப் பல மடங்கு கலையமைதி தோய்ந்த வெளிப்படைத் தன்மை கொண்டது. சினிமாக்களில் சொல்லப்படுகின்ற ஜிக்ஷீவீறீஷீரீஹ் போல கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’, ‘ஓடும் நதி’, ‘உருள் பெருந்தேர்...’ இந்த மூன்றையும் வரிசையாக வைத்து வாசிக்கலாம். அதனுடைய நீட்சியே இந்த ‘சுவரொட்டி’. தனது அனுபவங்களை வெற்றிகரமாக கலையாக்கும்போதே ஒரு கலைஞன் பரிணமிக்கிறான். இந்த ‘சுவரொட்டி’ வழி நாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கலையை, ரசனையை, பகடியை, பகட்டை, சாதாரண / அசாதாரண மனிதர்களின் எழுச்சியை, வீழ்ச்சியை, பகடையாட்டங்களை, ஆடுபவர்களே காய்களாகும் சோகங்களை அறிய முடிகிறது. அனுபவங்களை கலாப்ரியாவினால் அநாயசமாக கலையாக்க முடிகிறது. வெயில் படர்ந்த, 60களின் திருநெல்வேலி தெருக்களில் நம்மால் துல்லியமாக நடமாட முடிகிறது. அந்த தினத்தில், அந்தத் தெருவில் நடந்தவர்களின் முகக் கீறல் உட்பட நமக்குத் துலக்கமாகிறது. அது கலாப்ரியாவின் கலை ஓர்மை.

சாம்ராஜ்

சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்

ந. ஜயபாஸ்கரன்
கவிதை

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 64
விலை ரூ. 50


மதுரையை ஆசையின் எல்லையற்ற எல்லையாகவும், திருவிளையாடற் புராணத்தை ஆசையின் எண்ணற்ற படலங்களாகவும் நவீன கவிதைகளில் கையாள்கிறார் ஜயபாஸ்கரன். அவ்வகையில் வருடம் முழுவதும் திருவிழாக்களை காலம்காலமாக பாவிக்கும் வாழ்தலின் ஆசையை வண்ண, வண்ண உணவுகளாக்கிப் பரத்தியிருக்கும் புராணிகம் மற்றும் வேறு காலத்தின் பெருமிதத்தில் திளைக்கும் நரிகள் இன்றும் அடிக்கடி பரிகளாக வேடமிடும் பல அடுக்குகளிலான மதுரையை, ஆசையின் நித்திய குறியீடாக அவர் மாற்றியுள்ளார். தன் அணிகலனான ‘ஆசை’யின் பாம்பால் மீண்டும் ஜயபாஸ்கரன், கவிதைகள் வாயிலாக ஆலவாயை அளக்க முயன்றிருக்கிறார். தமிழ்க் கவிதையெனும் அகன்ற சன்னதியில் மிக அழகிய, ‘சின்ன மோகினி’ உருவமாக ஜயபாஸ்கரன் இருப்பார்.

ஷங்கர்ராமசுப்ரமணியன்