விதி சமைப்பவர்கள்

ஜெயமோகன்
உரையாடல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 216
விலை ரூ. 190


இணையத்தில் தனிப்பட்ட கடிதங்களுக்கு நான் பதிலளிப்பது பற்றி நிறைய கருத்துக்கள் வந்துள்ளன. அவ்வாறு எழுத்தாளன் எதிர்வினையாற்றத்தான் வேண்டுமா என்கிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் எதிர்வினையாற்றுவதில்லை; அது எழுத்தாளனின் இயல்பு. என் நோக்கில் ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் எனக்கு முன்னோடிகள்; அவர்கள் எதிர் வினையாற்றியவர்கள்இந்த எதிர்வினைகள் என்னைத் தொடர்ந்து என் வாசகர்களுடன் நேரடியான தொடர்பில் வைத்திருக்கின்றன. விதவிதமான வாழ்க்கையனுபவங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் பயணம் செய்ய வைக்கின்றன. ஒவ்வொரு நாளும் மானுடவாழ்க்கை என்ற மாபெரும் நாடகத்தின் பார்வையாளனாக அமர்த்துகின்றன. எழுத்தாளனாக இது எனக்குப் பெரிய சொத்துநான் வாழ்க்கையிலிருந்து அறிந்த சில, எனக்குச் சொல்வதற்காக இருக்கின்றன. அவற்றையே நான் நாவலாக எழுதுகிறேன்; சிறுகதைகளாக்கு கிறேன்; கட்டுரைகளும் உரைகளுமாக வெளிப்படுத்துகிறேன். இந்த உரையாடல்கள் எல்லாமே கட்டுரைகளும் கூடத்தான்இவை வழியாக இன்றைய தமிழ்ச்சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் மனநிலைகளின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைக்கலாம். இவற்றை நான் எதிர்கொள்ளும் விதம் வழியாக நான் வாழ்க்கை பற்றிக் கொண்டிருக்கும் நோக்கு வெளிப்படலாம்நான், வாழ்க்கை ஒரு மாபெரும் கொடை என்ற உணர்வை என் இளமையில் அடைந்தேன். அதைத்தான் இன்றுவரை எல்லாக் கதைகளிலும் கட்டுரைகளிலும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த நூலில் எல்லாக் கட்டுரைகளும் அதைத்தான் சொல்கின்றன.

ஜெயமோகன்

எழுதியவனைக் கண்டுபிடித்தல்

ஜெயமோகன்
உரையாடல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 136
விலை ரூ. 120

ஆழ்மனம் என்பது படிமங்களின் கொந்தளிப்பு. ஆழ்படிமங்களின் முடிவில்லாத மறுபிறப்புவெளி. ஆகவே எந்தக் கலைஞனும் படிமங்களையே தன் மொழியாகக் கொண்டிருக்கிறான். அறியும் மொழியாகவும் வெளிப்படுத்தும் மொழியாகவும். ஆகத் துல்லியமான படிம மொழியை அடைவதே அவன் சவால். மொழியில் ஒலியில் வடிவங்களில் வெளியில் இருந்து அவனுக்குக் கிடைக்கும் கடந்த காலப் படிமங்களை விலக்குவது, அன்றாடம் புழங்கும் எளிய கருத்துக்களைப் படிமங்களாக ஆக்குவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை அவன் செய்யவேண்டும். விளைவாகத் தனக்குரிய படிம மொழியை அடைந்து அதைத் தன் ஆழ்மனத்துடன் கச்சிதமாக ஒரே அலைவரிசையில் இணைக்க அவனால் முடியுமென்றால் அவன் கலையை உருவாக்க ஆரம்பிக்கிறான். கலையில் உள்ள தொழில்நுட்ப அம்சம் என்பது இது தான். அவ்வாறு இணைகையில் சமூகமனதின் குரலாக அவன் ஆகிறான்.

கன்னிநிலம்

ஜெயமோகன்
நாவல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 168
விலை ரூ. 140

நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகா மில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கி யிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல்.  இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியதுஎங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறதுகாதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை.

ஜெயமோகன்

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை!

அ. முத்துலிங்கம்
நேர்காணல்

அளவு: 1 X 8
தாள்: 18.6 கேஜி மேப்லித்தோ
பக்கங்கள்: 144
விலை ரூ. 120


எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் . முத்துலிங்கம். அவரது எழுத்துகள் தொலைதூர தேசங்களுக்குச் சென்று, பல வருசங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய சகோதரன் தனது அனுபவங்களைக் குடும்பத்தாரிடம் சொல்வது போன்ற நெருக்கமும் நெகிழ்வும் கொண்டது. கனடாவில் வசிக்கும் அவர் உலகநாடுகளில் பாதியைச் சுற்றிவந்தவர். அன்றாட நிகழ்வுகளை இத்தனை ரசனையோடும் ஈடுபாட்டோடும் அவதானித்து, அதிலிருந்து தனது படைப்புகளை உருவாக்கும் ஒரு எழுத்தாளரைக் காண்பது அபூர்வம். இயற்கையின் மீதான பற்றுதல்; தேடித்தேடி நல்ல புத்தகங்கள், இசை, நுண்கலை, சினிமா என்று நீளும் அவரது தேடுதல் தனித்துவமானது. முத்துலிங்கம் எழுத்துகளில் காணப்படும் உள்ளார்ந்த பகடி நினைத்து நினைத்து சிரிக்கக்கூடியது.

எஸ். ராமகிருஷ்ணன்